மாணவி கோமதி பள்ளிக்கு வந்த நிலையில் சோர்வாக இருந்துள்ளார். தூங்குவது போல காணப்பட்ட கோமதியை ஆசிரியை முகம் கழுவி வருமாறு கூறியுள்ளார். பாத்ரூமில் முகம் கழுவி விட்டு வகுப்பறைக்குள் நுழைந்த கோமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட சகமாணவி மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கரூரில் இன்று காலை வகுப்பறையில் பிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் மகள் கோமதி (17). இவர் கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
undefined
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோமதி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஓரளவு உடல்நலம் தேறியதையடுத்து அவர் தொடர்ந்து பள்ளிக்கு வந்து சென்றார். இந்நிலையில் இன்று காலை பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் அமர்ந்திருந்தார்.
மாணவி கோமதி பள்ளிக்கு வந்த நிலையில் சோர்வாக இருந்துள்ளார். தூங்குவது போல காணப்பட்ட கோமதியை ஆசிரியை முகம் கழுவி வருமாறு கூறியுள்ளார். பாத்ரூமில் முகம் கழுவி விட்டு வகுப்பறைக்குள் நுழைந்த கோமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட சகமாணவி மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். பின்னர், கோமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது. உறவினர் மருத்துவமனை முன்பு குவிந்ததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.