கரூர் மாவட்டதில் ஊரடங்கு உத்தரவால் அவதிகுள்ளாகியிருக்கும் மக்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது சொந்த செலவில் உதவி வருகிறார். அதன்படி கரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், அரைக்கிலோ சர்க்கரை, 1கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள் பொடி உள்ளிட்ட சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்கள் வழங்கும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 33 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
undefined
அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டதில் ஊரடங்கு உத்தரவால் அவதிகுள்ளாகியிருக்கும் மக்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது சொந்த செலவில் உதவி வருகிறார். அதன்படி கரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், அரைக்கிலோ சர்க்கரை, 1கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள் பொடி உள்ளிட்ட சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்கள் வழங்கும் பணியினை மேற்கொண்டுள்ளார். கடந்த 19ம் தேதி அன்று நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதுமுதல் பல இடங்களுக்கு தானே நேரடியாக சென்று பொதுமக்களுக்கு உணவுக்கான பொருட்களை கொடுத்து வருகிறார்.
மேலும் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச்சென்று அமைச்சரின் சார்பில் உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் சுமார் 35 வாகனங்களில் ஒரு வாகனத்திற்கு 150 பைகள் வீதம் மொத்தம் 5,250 பைகளில் உணவுக்கான பொருட்களை அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். இதுவரை சுமார் 43,430 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களுடன் கூடிய பைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு உதவும் பணியினை அமைச்சர் விஜயபாஸ்கர் துரிதப்படுத்தியிருக்கிறார்.