கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் மாநகராட்சி அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் 3 பேர் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுள்ளனர்.
கரூரில் அரசுப் பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்கள் ரயில் நிலையத்திற்கு செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் மாநகராட்சி அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் 3 பேர் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால், மீண்டும் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர்.
undefined
இதையும் படிங்க;- மாயமான 3 அரசு பள்ளி மாணவிகள்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!
அப்போது, அந்த மூன்று பேரும் பள்ளிக்கு வராதது தெரியவந்துள்ளது. இதன் மூலம் மாணவிகள் காலை பள்ளிக்கு செல்லாமல் மாயமாகியது தெரியவந்தது. இதுகுறித்து, தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பள்ளி அருகில் உள்ள கோயில் ஒன்றில் மூன்று மாணவிகளின் சீருடை அவிழ்த்து வைத்துவிட்டு மாற்று உடையில் பேருந்தில் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. 7ம் தேதி முதல் மூடப்படும் சாலைகள் விவரம் இதோ.!
இந்நிலையில் மாயமான 3 பள்ளி மாணவிகள் ஸ்கூல் பேக்குடன் மாஸ்க் அணிந்து கொண்டு கரூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.