கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ. 10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்எல்ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ. 10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்எல்ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
undefined
இந்நிலையில் 4- வது முறையாக நேற்றும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்றும் அவர் ஆஜராகவில்லை. இதனால், கடுப்பான நீதிபதி குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குளித்ததலை திமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.