செல்போன் வெடித்து மாணவர் பலி.. மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Dec 31, 2020, 3:53 PM IST

சார்ஜரில் போட்டபடி செல்போனைப் பயன்படுத்திய மாணவர் ஒருவர், செல்போன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த அதிர்ச்சியை அறிந்த தந்தையும் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சார்ஜரில் போட்டபடி செல்போனைப் பயன்படுத்திய மாணவர் ஒருவர், செல்போன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த அதிர்ச்சியை அறிந்த தந்தையும் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. 12ம் வகுப்பு படித்துவந்தார். இவர், வீட்டிலுள்ள மின்சாதனப் பொருள்களைப் பழுது பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு, அதைப் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். இதனால், சூடான செல்போன் பலத்த சத்தத்தோடு வெடித்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மகன் உயிரிழந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் தந்தை செல்லமுத்து (40) மாரடைப்பு ஏற்பட்டது.

Latest Videos

இதைக் கண்டு பதறிய அவர்களின் உறவினர்கள், இருவரையும் கொண்டு வந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

அதைக் கேட்டு, உறவினர்கள் அதிர்ந்துபோனார்கள். இருவரது உடல்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!