சாலையோரத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து... சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு...!

திருப்பதி சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது அரவக்குறிச்சி அருகே கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

car accident... 3 people kills

திருப்பதி சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது அரவக்குறிச்சி அருகே கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (38) சரஸ்வதி (37) தம்பதிகள். இவரது மகள் தசிதா.(4). அருகிலுள்ள நல்லா கவுண்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்வம் (50). இவர்கள் இரு தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று இருந்தனர். தரிசனம் முடித்து விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். car accident... 3 people kills

Latest Videos

அப்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பாலத்தில் மோதி சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சரஸ்வதி, தசிதா, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ணன் படுகாயமடைந்தார். 

விபத்து தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!