கரூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை அருகே லாலாப்பேட்டை அருகே தாளியம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
undefined
கோபி மற்றும் கவிதா சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதனையடுத்து இருவீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். மனமுடைந்த கோபி, கவிதாவை அழைத்துக் கொண்டு திம்மாச்சிபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டில் அனைவரும் வெளியில் சென்ற நேரத்தில் கோபி தூக்கு மாட்டியும், கவிதா விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.