பாஜக எனும், மாப்பிள்ளை வீட்டாரும், கூட்டணி கட்சிகள் என்ற பெண் வீட்டாரும் ஒன்று சேரும்போது முதலில் சின்ன சின்ன சண்டைகள் இருக்கலாம், அதனை பெரிது படுத்த வேண்டாம் என கூட்டணி கட்சிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். அண்ணாமலையின் சொந்த தொகுதியான கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வி.வி. செந்தில் நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் செந்தில் நாதனை கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது.
undefined
இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சி வேட்பாளர் செந்தில் நாதன் உள்பட அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாங்க ஜெயிச்சா ரூ.1000 இல்ல ரூ.1,500; திமுகவுக்கு அண்ணாமலை சவால்
அறிமுக விழாவில் அண்ணாமலை மேடையில் பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு கூடியிருந்த கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் இடையே சற்று சலசலப்பான சூழல் ஏற்பட்டது. இதனை உணர்ந்து கொண்ட அண்ணாமலை, உடனடியாக, பாஜ எனும் மாப்பிள்ளை வீடும், கூட்டணிக்கட்சி என்ற பெண் வீட்டாரும் ஒன்று சேரும் போது முதலில் முட்டல்கள் வரதான் செய்யும். அதனை பெரிது படுத்தாமல் அனைவரும் நமது வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சலசலப்பு சற்று அடங்கியது.