களைக்கொல்லி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்.. கதறிய பெற்றோர்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published May 3, 2023, 6:53 AM IST

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் ஒன்றாக சேர்ந்து நூடுல்ஸ் செய்ய முடிவு செய்தனர். இதற்காக தோகைமலை பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கினர். 


கரூர் அருகே எண்ணெய் எனக்கருதி களைக்கொல்லி மருந்தை பயன்படுத்தி நூடூல்ஸ் தயாரித்து சாப்பிட்ட 15 சிறுவர், சிறுமியர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் ஒன்றாக சேர்ந்து நூடுல்ஸ் செய்ய முடிவு செய்தனர். இதற்காக தோகைமலை பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கினர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சமைத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை நல்லெண்ணெய் என்று நினைத்து அதனை நூடுல்சில் ஊற்றி கிளறி உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அட கடவுளே.. சீறிய போது வாடிவாசலில் மயங்கி விழுந்த சின்ன கொம்பன் காளை.. பதறிய விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?


 
பின்னர் சிறுவர், சிறுமிகள் அந்த நூடுல்சை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அடுத்தடுத்து  குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் 15 குழந்தைகளையும் அலறி கூச்சலிட்ட படி அப்பகுதி உள்ள தோகைமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இதையும் படிங்க;-  சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

click me!