சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்..!!
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக தவுபீக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 21-ம் தேதி முதல் போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது உள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழக அரசு செய்துள்ளது.
TBalamurukan