ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?

கன்னியாகுமரி-மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் விபத்திலிருந்து தப்பியது. 

Conspiracy to overturn express train in Kanyakumari tvk

கன்னியாகுமரில் இருந்து மங்களூருவுக்கு இன்று அதிகாலை  பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இரணியல் ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அபோது ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் என்ஜின் ஆப்ரேட்டர் சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: திருச்செந்தூர், ராமேசுவரத்தை அடுத்து பழநி முருகன் கோவிலில் பக்தர் உயிரிழப்பு! கலங்கிய அண்ணாமலை!

Latest Videos

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயிலில் இருந்து கீழே இறங்கிய ரயில் ஓட்டுநர் சம்பவம் தொடர்பாக  ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், போலீசார் விரைந்தனர். இதனையடுத்து  தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றியதை அடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. 

கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்ற நபர் யார் என்பது குறித்தும் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு நிவாரணம்! எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை ரயில் ஒட்டுநர் கண்டறிந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

vuukle one pixel image
click me!