குமரியில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; பாஜக பிரமுகர் அதிரடி கைது

By Velmurugan sFirst Published Jan 12, 2024, 4:31 PM IST
Highlights

கன்னியாகுமரியில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் நாகர்கோவில் அருகே உள்ள  கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போ சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெண் மருத்துவரின் செல்போன்  மூலமாகவும் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. 

20 ஆண்டு தண்டனையா? தீர்ப்பை கேட்டு நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த போக்சோ குற்றவாளிகள்; திருச்சியில் பரபரப்ப

நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால் வேதனை அடைந்த பெண் மருத்துவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் மீது கோட்டார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து  போலீசார் அவரை கைது செய்தனர். பாஜக பிரமுகர் பெண் மருத்துவருக்கு  அளித்ததாக கைது செய்யப்பட்டது. நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சியில் உறியடித்து தமிழர் திருநாளை கோலாகலமாகக் கொண்டாடிய அமைச்சர் நேரு

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் குறித்து விசாரிக்கும் போது கடந்த 2022ம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட ஜெயக்குமார் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2022ம் ஆண்டு இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்ட இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்து பாஜக பிரமுகராக வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பெண் மருத்துவர் அளித்த பாலியல் தொடர்பான புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

click me!