ஆனால் அப்போது குடிபோதையில் இருந்த இளைஞர்கள் அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி ரங்கசாமியின் மகளையும் தரக்குறைவாக பேசியுள்ளனர்
தீபாவளி நாளான இன்று ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்டபுள்ளாம்பாளையம் காலனியில் மதுசூதனன் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் தெருவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரது வீட்டின் அருகே வசிக்கும் ரங்கசாமி, அருக்காணி தம்பதியினர் தன்னுடைய மகளும் மருமகனும் தீபாவளிக்கு வந்திருப்பதால் வேறு பகுதிக்குச் சென்று கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அப்போது குடிபோதையில் இருந்த இளைஞர்கள் அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி ரங்கசாமியின் மகளையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திமடைந்த தம்பதியினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
அதன்பின்னரும் ஆத்திரம் தீராத மதுசூதணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரங்கசாமி, அருக்காணி தம்பதியினரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பினர். தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.