கோவையில் பெண் போலீஸ் ஒருவர் தனது ஆண் நண்பருடன் தகாத உறவில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்த பெண் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவையில் பெண் போலீஸ் ஒருவர் தனது ஆண் நண்பருடன் தகாத உறவில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்த பெண் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண் போலீஸ் ஒண்டிப்புதூரில் உள்ள தன்னுடைய ஆண் நண்பருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இவர்கள் இருவருமே விவாகரத்தானவர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை அந்த பெண் போலீஸ் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய செல்போன் தொலைந்துள்ளது. அதனை எடுத்த ஆசாமி இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது. இது தொடரப்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில் சீருடையில் இதுபோன்ற அநாகரீகமான முறையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
இது பணியின்போது நடக்கவில்லை என்றும் இது தனியார் இடம் என்றும் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த ஆணும் காவல்துறையைச் சேர்ந்தவர்தான் என்று தகவல் வெளியாகியது. ஆனால், அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்தக் பெண் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.