ஆம்பள புள்ளைக்கு ஜெயலலிதா பெயர்... அமைச்சர் செங்கோட்டையனின் அம்மா விஸ்வாசம்!

By Asianet Tamil  |  First Published Apr 4, 2019, 10:11 AM IST

கோபிசெட்டிபாளையத்தில் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார் அமைச்சர் செங்கோட்டையன்.


கோபிசெட்டிபாளையத்தில் பிரசாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஈடுபட்டிருந்தார். கோபி அருகே உள்ள பெரியார் நகரில் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்-பிரியா தம்பதியினர் அமைச்சரை அணுகி, தங்களுடைய 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு செங்கோட்டையனிடம் கோரிக்கை வைத்தனர். 
திறந்த ஆட்டோவில் நின்றுகொண்டிருந்த செங்கோட்டையன், கீழே இறங்கி, குழந்தையா ஆர்வமாக வாங்கி, “இந்தக் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டுகிறேன்” என்று தெரிவித்தார். இந்தப் பெயரை கேட்டதும் அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல, அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் முணுமுணுத்தார்கள். ‘ஐயா, இது ஆண் குழந்தை’ என்று குழந்தையின் பெற்றோர் கூறவே, சங்கடத்தில் அமைச்சர் நெளிந்தார்.

 
சிரித்து சமாளித்தபடி, ஜெயலலிதா அல்ல, `ராமச்சந்திரன்’ என்று எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார். என்ன குழந்தை என்று அறியாமல் குழந்தைக்கு அமைச்சர் பெயர் சூட்டிய நிகழ்வு அங்கே சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

click me!