பொள்ளாச்சி பாலியல் வீடியோ விவகாரம்... எஸ்.பி.பாண்டியராஜன் அதிரடி டிரான்ஸ்பர்...!

By vinoth kumar  |  First Published Apr 1, 2019, 12:31 PM IST

பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும் கல்லுாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உள்துறை செயலர் பிறப்பித்த அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. எஸ்.பி. பாண்டியராஜனை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. 

இந்நிலையில் அவர் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் பொள்ளாச்சி டிஎஸ்பி, மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவைக்கு புதிய எஸ்.பியாக சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக நடராஜன் நியமனம் செய்யப்படுவதாக தமிழக உள்துறை செயலாளர் அறி்க்கை வெளியிட்டுள்ளார். 

click me!