பொள்ளாச்சி வீடியோ விவகாரம்... துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் மாணவிகள்..!

By vinoth kumarFirst Published Mar 16, 2019, 1:21 PM IST
Highlights

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலியாக கோவையில் மாணவிகள் 2 பேர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலியாக கோவையில் மாணவிகள் 2 பேர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த இருவரும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த மனுவில் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருப்பது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது . இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பார்க்கும் போது தங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இது போன்ற  செயலை  காவல் துறை இத்தனை நாட்களாக கண்டு கொள்ளாமல் எப்படி இருந்தார்கள் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இந்நிலையில் தங்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கி உரிமம் வழங்கிட வேண்டும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

click me!