பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்கள் காரில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சி அருகே வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த பிரகாஷ்(48), பூஜா(45), தாரணி(50), ஆகிய பெண்களும், சுமதி(8), லதா(9) என்ற 2 குழந்தைகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடனே இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற அவர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. காருக்குள் இருந்த 6 பேர் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை அகலமாகவும், அதன் வளைவில் பாலம் குறுகியதாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. நள்ளிரவில் கார் வேகமாகச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் பாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கால்வாயில் கார் விழுந்தபோது கதவுகள் அனைத்தும் லாக் செய்யப்பட்டிருந்த காரணத்தால், யாராலும் தப்பிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.