Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

By Raghupati RFirst Published Feb 24, 2023, 7:53 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த மாதம் திடீரென காலமானார். இதையடுத்து வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அருந்ததியர் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. நாளையும் பிரசாரம் முடிவுக்கு வர உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 39.5 முதல் 65.0 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..எடப்பாடி அண்ணே நீங்கதான் பொதுச்செயலாளர்!.. கைவிட்ட பாஜக.. காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் - தர்மயுத்தம் 2.0 ரெடி

அதிமுக வேட்பாளர் தென்னரசு 24.5 முதல் 41 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியின் மேனகா  9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக, நோட்டா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து 5 சதவீத வாக்குகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வாக்காளர்களின் வாக்குகள் 29.5 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கும், 28.5 சதவீதம் காங்கிரஸ்க்கும், 17 சதவீதம் அதிமுகவுக்கும், 3 சதவீதம் தேமுதிகவுக்கும் கிடைத்துள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்தனிச் சின்னங்களில் நின்றிருந்தால் நாம்தமிழர் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க..நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?

click me!