
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்ட சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது சலசலப்பு ஏற்பட கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். அப்போது ஆவேசம் அடைந்து விஜய பிரபாகரன், இந்த சவுண்டு எல்லாம் இங்க விடக்கூடாது. முறையாக அனுமதி வாங்கித் தான் பிரச்சாரம் செய்கிறோம். விஜயகாந்த் மகன் சின்னப்பையன் என்று நினைக்காதீர்கள்.
மக்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக வந்து நிற்பேன்.நீங்கள் விஜயகாந்த் ,பிரேமலதா இருவரையும் பார்த்திருக்கலாம். நான் இரண்டு பேரும் சேர்ந்த விஜய பிரபாகரன் . நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று ஆவேசப்பட்டு பேசினார் விஜய பிரபாகரன். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!