“சண்முகம் எடுடா வண்டிய” நாட்டாமை பட பாணியில் மணப்பெண்ணுடன் ஊர்வலம் வந்த மருத்துவர்

By Velmurugan sFirst Published Mar 28, 2023, 11:00 AM IST
Highlights

ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட மருத்துவர் பாரம்பரியம் மாறாமல் தனது மனைவியை மாட்டு வண்டியில் வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

ஈரோடு திண்டல் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி, உமாமகேஸ்வரி தம்பதி. இவர்களின் மகன் மருத்துவர் நிசாந்த் பாலாஜி. இவர் தற்போது தோல் மருத்துவத்துக்கான உயர்கல்வி படித்து வருகிறார். இவருக்கும், ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த ரித்துவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ இன்று ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில்  உள்ள தனியார் மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. 

தந்தையைின் சடலத்திடம் ஆசி பெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவன்; திண்டுக்கலில் நிகழ்ந்த சோகம்

தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் மருத்துவர் நிசாந்த் பாலாஜி தாலி கட்டி ரித்து-வை மனைவியாக ஏற்றுக்கொண்டார். மங்கலநாண் பூட்டும் நிகழ்வுக்கு பின்னர் புதுப்பெண்ணினை, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தது. அப்போது புதுமண தம்பதிகள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். மணமகன் கையில் அலங்கரிக்கப்பட்ட சாட்டையுடன் மாடுகளை தட்டி வண்டி ஓட்டினார். 

சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை ஓட ஓட வெட்டிய தாய், தந்தை கைது

மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் மணமக்கள் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது மணமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மாட்டு வண்டியை அழகாக ஓட்டியது பார்ப்பவர்களையும் உற்சாகம் அடையச் செய்தது.

click me!