அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு.. 30 பயணிகளை உயிரை காப்பாற்றி உயிரிழந்த சோகம்..!

By vinoth kumar  |  First Published Jul 11, 2021, 6:34 PM IST

அரசு பேருந்தை இயக்கிய போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரசு பேருந்தை இயக்கிய போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள மணியங்காட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் கவுந்தப்பாடி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற செல்வராஜ் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறை நோக்கி பேருந்தை இயக்கினார். அப்போது, பேருந்து வெள்ளாங்கோயில் வரும் போது திடீரென ஓட்டுநர் செல்வராஜிக்கு திடீரென  மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக செல்வராஜ் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார்.

Tap to resize

Latest Videos

பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.  தனது உயிர் போகும் தருணத்திலும், பயணிகளைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஓட்டுநர் செல்வராஜின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!