ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நல்லசாமி தலைவராகவும், 2001ம் ஆண்டு, அதிமுகவை சேர்ந்த கந்தவேல்முருகனும், 2006 மற்று 2011ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அதிமுகவை சேர்ந்த ரேவதி தேவியும் தலைவர் பதவியை வகித்து உள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 23 வார்டுகளை கைப்பற்றி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டையாக கருத்தப்பட்ட கோபி நகராட்சியை 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நல்லசாமி தலைவராகவும், 2001ம் ஆண்டு, அதிமுகவை சேர்ந்த கந்தவேல்முருகனும், 2006 மற்று 2011ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அதிமுகவை சேர்ந்த ரேவதி தேவியும் தலைவர் பதவியை வகித்து உள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 23 வார்டுகளை கைப்பற்றி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
undefined
கோபி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தலைவர் பதவி அதிமுக வசமே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், 4வது முறையாக தலைவர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்று அதிமுக களத்தில் இறங்கியது.
இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.