ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால், நேற்று முன்தினம் விழாவில் அவருடன் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோருக்கு கலக்கமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கடந்த 2 நாட்களாக லேசான உடல் வலி இருந்து வந்தது. சந்தேகத்தின்பேரில், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று வெளியான முடிவில் கதிரவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனது வீட்டிலேயே மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி அருகே நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், மற்றும் 3 எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளிடம் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.