நிர்மலா சீதாராமனை யாசம் பெறுபவர்களோடு ஒப்பிட்டு பேசிய ஈவிகேஎஸ்; ஈரோட்டில் பரபரப்பு பேட்டி

By Velmurugan sFirst Published Mar 29, 2024, 5:45 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக ஈரோடு அதிமுக வேட்பாளர் 250 போலி வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஈரேட்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது இல்லத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்படுகிறது. குறிப்பாக கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல தவறுகள் செய்துள்ளார். கேட்ட விவரங்களை முழுமையாக கொடுக்கவில்லை. எந்த தொகுதியில் வாக்காளராக இருக்கிறார் என்று வேட்புமனுவில் விவரம் தாக்கல் செய்யவில்லை.

இதற்கு அனைத்து வேட்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து செல்போன் மூலம் தகவல் வந்ததால் வேட்புமனு ஏற்றுக்கொள்வதாக கோவை தேர்தல் அலுவலர் தெரிவித்தார். ஈரோட்டில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோடிக்கணக்கான மதிப்புள்ள புடவைகளை குடோனில் பதுக்கி வைத்து தானமாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஈரோடு காவல்துறையினர் கண்டுபிடித்து பதுக்கி வைத்திருந்த பொருட்களை அரசாங்க பொறுப்பில் வைத்துள்ளனர்.

மத்தியில் ஆட்சி அமைப்பவர்களை புதுவையில் வெற்றி பெற வைத்தால் தான் நமக்கு நிதி கிடைக்கும்; புதுவை முதல்வர்

இதுகுறித்து காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோடு அதிமுக வேட்பாளர் வங்கிகளில் 250 போலி கணக்குகளை ஆரம்பித்து வைத்துள்ளார். அதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஈரோடு தேர்தல் அதிகாரியும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சின்னங்களை உடனே தருகிறது. திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள், மதிமுகவிற்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை 10 மணிநேரம் கால தாமதத்திற்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவித்துள்ளது.

இப்படி அறிவிக்கக் கூடாது என்ற நிலையில் இப்படி அறிவிப்பது அயோக்கியத்தனம். தேர்தல் விதிமீறல்கள் தெரியாத பிரதமர் இருப்பது துர்திஷ்டமான விஷயம். இது அப்பட்டமான விதிமுறை மீறல். "நிர்மலா சீதாராம் டை அடிக்காமல் இருந்தால் பிச்சை காசு போடுங்கள் என்பதற்கு பொருத்தமான இருப்பார். "கையில் காசில்லை என போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அவர் பையிலும், படுக்கையறையிலும் பணம் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் சர்வதிகார ஆட்சி நடக்கிறது என அமெரிக்கா, ஜெர்மனி என வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதனை நிர்மலா சீதாராமன் கணவரும் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் முதல்வர் ஸ்டாலின் கரங்களை பலப்படுத்தும் தேர்தலாக இருக்கும். கடந்த தேர்தலில் நான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில் இந்த முறை அனைத்து தொகுதியும் வெற்றி பெறுவது உறுதி. மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்றும் நல்ல முடிவாக இருக்கும்.

“20 வருசமா ரோடு சரியில்ல” பிரசாரத்தின் போது கேட்ட ஒற்றை கேள்வி; கடுப்பாகி பாதியில் கிளம்பிய தங்க தமிழ்செல்வன்

இந்தியாவில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது. ஜனநாயக விரோதமான காரியத்தை மோடி அன்ட் கோ செய்கிறார்கள். தேர்தலுக்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி. போதைப்பொருள் எம்ஜிஆர் காலத்தில் இருந்து வருகிறது. எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் போதைக்கு அடிமையாக இருந்த வரலாறு உண்டு. போதை பொருட்கள் குஜராத் அதானி துறைமுகத்தில் இருந்து மும்பை, டெல்லிக்கு கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இளைஞர்கள் போதை கலாசாரத்திற்கு அடிமையாக அமித்ஷா, மோடி தான் காரணம். குஜராத் மாநிலத்தில் மோடி, அமித்ஷா உத்தமர்கள். குஜராத் மாநிலத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தினால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்துவேன். உடல்நிலை பாதித்துள்ள காரணத்தால் முன்பு போல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. ஈரோடு வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற உடல்நிலையை மீறி செயல்படுவேன். முடிந்தால் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பத்து தொகுதியில் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்.

click me!