வசமாக சிக்கிய அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்! 150 மூட்டை புடவைகள் பறிமுதல்!இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By vinoth kumar  |  First Published Mar 27, 2024, 1:10 PM IST

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். 


ஈரோட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அக்குபஞ்சர் சிகிச்சை மையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 150 மூட்டை சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்திவரும்  சந்தோஷம் பிரானவ் ஹீலிங் அக்குபஞ்சர் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கு உரிய வகையில் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்ட மூட்டைகள் அடுக்கி வைப்பபட்டது. 

Latest Videos

இதையும் படிங்க: அடேங்கப்பா.. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுதொடர்பாக பொதுமக்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அளித்த தகவலின் பெயரில் நேற்றைய தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள் ஏதும் இன்றி பதுக்கி வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 மூட்டை சேலைகளை கைப்பற்றினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வணிகவரித்துறை அதிகாரிகள் அக்குபஞ்சர் மைய உரிமையாளர் ரவிச்சந்திரன் இடம் நடத்திய விசாரணையில் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமான ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் கொண்டு வந்து அக்குபஞ்சர் சிகிச்சை மையத்தில் சேலைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது. 

இதையும் படிங்க: கைவிரித்த தேர்தல் ஆணையம்! மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது? வேற எந்த சின்னத்தில் நீக்க போறாங்க தெரியுமா?

தொடர்ந்து யுவராஜை பிடித்து விசாரணை செய்ததில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 2 லட்சத்திற்கும் மேலான 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலைகளை தேர்தல் விதிகளை மீறி பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது நண்பர் யுவராஜ் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை மைய உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேர் மீது  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாக்காளர்கள் கொடுப்பதற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான புடவைகளை கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!