கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தை..!

Published : May 17, 2019, 06:11 PM IST
கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தை..!

சுருக்கம்

கோவையில் அன்று அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 வயது சிறுமி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சிக்காக குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 வயது சிறுவன் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி தமிழ்செல்வியும் உயிரிழந்தார். இதில் 3 வயது குழந்தை நித்திகா அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்
ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?