திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குலதெய்வ வழிபாட்டுக்காக தேவதானத்துபட்டிக்கு சுற்றுலா வேனில் 6 மாத குழந்தை உள்பட 20 பேர் இன்று காலை சென்றனர். கோவிலில் வழிபாடு முடிந்து மீண்டும் ஊர் திரும்பினர். வேனை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலை செம்பட்டி அருகே கூலம்பட்டி பிரிவு அருகே வேன் வந்து கொண்டிருந்தது.
பாலியல் பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர்மன்றம் வைத்த இளைஞர்கள்; சமூக வலைதளத்தில் வைரல்
அப்போது, அந்த வழியாக வந்த காருடன் வேன் நேருக்கு நேர் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. காரை ஓட்டி வந்த ஒட்டன்சத்திரம் சொசைட்டி காலனியைச் சேர்ந்த பிரவீன் (வயது 35) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளின் திருமணத்திற்கு மாவு அரைத்த போது நேர்ந்த சோகம்; திருமண வீட்டில் ஒப்பாரி வைத்த உறவினர்கள்
மேலும் வேனில் பயணம் செய்த பாண்டிய ராஜன் (31), சங்கர பாண்டியன் (53), வேன் ஓட்டுநர்கள் சரவணன், சரத்குமார் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து செம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.