மனைவிக்கு பயம் காட்ட விளையாட்டாக நீரில் குதித்த நபர்; மனைவியின் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்

Published : Mar 22, 2023, 12:36 PM ISTUpdated : Mar 22, 2023, 12:38 PM IST
மனைவிக்கு பயம் காட்ட விளையாட்டாக நீரில் குதித்த நபர்; மனைவியின் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்

சுருக்கம்

வேடசந்தூர் அருகே தண்ணீரில் குதிக்கப் போகிறேன் என்று விளையாட்டாக கூறி கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து பாசான் கொடியில் சிக்கி கணவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் அமீர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் தங்களது துணிகளை துவைப்பதற்காக பாண்டியன் நகர் அருகே உள்ள பாறைக்குழிக்குச் சென்றனர். மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அமீருக்கும் மகாலட்சுமிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அமீர் தண்ணீருக்குள் குதிக்கப்போவதாக விளையாட்டாக மகாலட்சுமியை மிரட்டியுள்ளார். திடீரென கால் தடுமாறி அமீர் தண்ணீருக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் கொடிகள் அதிகமாக இருந்த காரணத்தால் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கணவரும் தன்னுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்ட மகாலட்சுமி நடப்பதை கண்டு கொள்ளாமல் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நேரமாகியும் தண்ணீரை விட்டு வெளியே கணவர் வராததால் சந்தேகமடைந்த மகாலட்சுமி கூச்சலிட்டார். 

தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை; உணவுக்கு சாணத்தை கொடுத்து கொடூரம் - பெண் கதறல்

மகாலட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர். அவர்கள் நீண்ட நேரம் தேடியும் அமீர் கிடைக்காததால், வேடசந்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி கொடியில் சிக்கியிருந்த அமீரின் உடலை மீட்டு எரியோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அமீரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

தோட்டத்தில் வேலை செய்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

விளையாட்டு வினையானதை ஏற்றுக் கொள்ள முடியாமல், கணவனை பறிகொடுத்த மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் கதறி அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?
தலை தீபாவளி அதுவுமா எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்! இருந்தாலும் ரூபியாவுக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது