திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம் (26). இவர் கரூரில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார்.
குளித்தலை அருகே கபடி போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணிக்கம்(26) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம் (26). இவர் கரூரில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளை ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் தனது நண்பர்களுடன் பங்கேற்று விளையாடி வந்துள்ளார். நேற்று இரவு இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று 3வது சுற்று போட்டிக்காக ஓய்வு எடுத்த நிலையில் திடீரென நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறிய சில நிமிடங்களில் மயங்கியுள்ளார்.
undefined
இதனால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் வாகனத்தின் மூலம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கபடி போட்டியில் பங்கேற்று 26 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.