பழனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் லயன்ஸ் கிளப் ரோட்டை சேர்ந்தவர் மனோகரன். சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் மோட்டார் சைக்கிள், ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஆகியவற்றை நேற்று நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில், மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயனபடுத்தி, மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து வீட்டுக்குள் இருந்த இருபதாயிரம் மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் சைக்கிளை திருடிச் சென்றார்.
மருத்துவர் மனோகரன் மாலையில் வீட்டுக்கு வந்தபோது சைக்கிளை காணவில்லை. உடனே, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை போட்டு பார்த்தார். அப்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டுக் கதவை திறந்து, சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து மனோகரன் பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
undefined
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பு பரிசு!!
பழனியில் சமீப காலமாக இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே இது போல திருட்டுகள் அதிகமாக நடைபெறுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே போலீஸார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு திருடர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.