நிறைமாத கர்ப்பிணியான சுமதி பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுமதி குழந்தை, தனது கணவர், தாயார் காளியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
ராமநாதபுரம் அருகே ஆட்டோ - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கான் (28). டீ மாஸ்டர். இவர் சுமதி (25) என்ற பெண்ணை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சுமதி பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுமதி குழந்தை, தனது கணவர், தாயார் காளியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை மலைராஜ் (52) என்பவர் ஓட்டி வந்தார்.
undefined
இதையும் படிங்க;- நடைபயிற்சியின் போது திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்து உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி கதிரவன்.!
அப்போது, உச்சிப்புளி அருகே நதிப்பாலம் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத கார் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சுமதி, ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ், பச்சிளம் குழந்தை, சின்ன அடைக்கான் ஆகியோர் உயிரிழந்தனர். காளியம்மாள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி! காதுவலிக்கு ஆபரேஷன்! சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவி.!
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பச்சிளம் குழந்தை மற்றும் பெற்றோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- ஆன்ட்டியின் அழகில் மயங்கிய இன்ஜினியர்.. நேரம் பார்த்து வீட்டில் புகுந்து பலாத்காரம்.. இறுதியில் நடந்த பயங்கரம்