நத்தத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து; பெண் பலி, 2 பேர் படுகாயம்

Published : Aug 25, 2023, 06:32 PM IST
நத்தத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து; பெண் பலி, 2 பேர் படுகாயம்

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் பலி, இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 48). நத்தம் செல்லம்புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களின் மகளுக்கு 2  தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த  திருமணத்திற்காக  நத்தம் அம்மன்குளம் அருகில் உள்ள மொத்த பலசரக்கு கடையில் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். 

அப்போது நத்தத்தில் இருந்து மெய்யம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சூரியபிரசாத்(22) கூலி தொழிலாளி மோதிய விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினார்கள் - ஆளுநர் ரவி பேச்சு

மேலும் படுகாயம் அடைந்த ஆரோக்கியசாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், சூரியபிரகாஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மகளுக்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் தாய் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?
தலை தீபாவளி அதுவுமா எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்! இருந்தாலும் ரூபியாவுக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது