திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன், கர்ப்பிணி மனைவி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவரது மனைவி காளீஸ்வரி (24). காளீஸ்வரி ஆறு மாத கர்ப்பிணியாக இந்ததாகக் கூறப்படுகிறது. சுரேஷ் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காளீஸ்வரிக்கு பள்ளபட்டியில் வளைகாப்பு நிகழ்த்திவிட்டு சுரேஷும் - காளீஸ்வரியும் தங்களது பெண் குழந்தை அபித்ரா ஸ்ரீ மூவரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டி என்ற இடத்தில், திருச்செந்தூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பின்புறத்தில் மோதியது.
’இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது’ - அண்ணாமலை காட்டம்
அசுர வேகத்தில் வந்த கார் மோதிய உடன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த கணவன், மனைவி இருவருமே நிகழ்விடத்திலேயே அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை அபித்ரா ஸ்ரீ படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடிகார கணவரால் சிதைந்த குடும்பம்; மனைவி, மகன் தற்கொலை - மூதாட்டி கவலைக்கிடம்