Latest Videos

கடன் மற்றும் குடும்ப பிரச்சினையால் நிம்மதி இழந்த காவலர்; விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் விபரீத முடிவு

By Velmurugan sFirst Published Jun 13, 2024, 9:57 AM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் மற்றும் குடும்ப பிரச்சினையால் நிம்மதியை இழந்த காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம்‌. இவரது மகன் வினோத்குமார்‌(வயது 32). இவர் சென்னையில் ஏ.ஆர்.போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில்  இரண்டு நாள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கன்னிவாடிக்கு வந்துள்ளார். நேற்று  குடும்ப பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக வினோத் குமார் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  

மீண்டும் வாக்கு எண்ணிக்கையா? பொய் பிரசாரத்தை இத்தோடு நிறுத்துங்கள் - தேமுதிகவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடற் கூறாய்வுக்காக வினோத்குமாரின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி உதவி செஞ்சி பாருங்க நிம்மதியா தூக்கம் வரும் - மாற்று திறனாளிகளை நெகிழ வைத்த மதுரை முத்து

இதனிடையே கடன் பிரச்சனை காரணமாக காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!