கொடைக்கானலின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான நட்சத்திர ஏரியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நட்சத்திர ஏரி. கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். கொடைக்கானலின் இதய பகுதியாக கருதப்படக்கூடிய ஏரி எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை பகுதியான புதுப்புத்தூர் பகுதியில் இருந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக குடும்பத்தினருடன் காளிமுத்து மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஆறு பேர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவ அறிக்கை கிடைப்பதற்கு சிறிது நேரம் ஆகும் என்று மருத்துவமனையில் கூறியதாக கூறப்படுகிறது.
நாகை அரசு மருத்துவமனை இடம் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு; பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
இதனால் மருத்துவமனையில் காத்திருக்காமல் ஏரி சாலையில் பொழுதைக் கழிக்க வந்த காளிமுத்து மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் அவர்களுடன் வந்த பெண்களை மட்டும் இறக்கி விட்டு ஏரி சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை இடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் பாய்ந்தது. இதில் சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு வாகனம் ஏரிக்குள் சென்றது.
ஜூன் 15ல் முப்பெரும் விழா; கோவை குலுங்கிட வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த ஜெயபிரகாஷ் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர் பாதுகாப்பாக மீட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி உதவியுடன் ஏரிக்குள் விழுந்த வாகனத்தை மீட்டனர். கார் மோதியதில் விபத்தில் சிக்கிய பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரபரப்பாக செயல்படும் நட்சத்திர ஏரியில் திடீரென கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.