திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் பேருந்து நிலையத்திற்கு வெளியில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக் குறியாக மாறி வருகிறது. அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே விபத்துக்கு காரணமாக அமைவதாக பொதுமககள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மகளிருக்கு நகரப் பேருந்தகளில் இலவசப் பயணம் என்ற திட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்கனவே நட்டத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் இழப்பீட்டை சந்தித்து வருகின்றன.
பீகாரில் ரூ.1500, தமிழ் நாட்டில் 2.5 லட்சம்; குழந்தை இல்லாதவர்களை டார்கெட் செய்த வடமாநில தம்பதி
undefined
இதனால் புதிய பேருந்துகளை வாங்குவதிலும், பழைய பேருந்துகளுக்கு செலவு செய்து பராமரிப்பதிலும் தொய்வு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதால் தற்காலிக ஓட்டுநர்கள், தற்காலிக பணியாளர்களை வைத்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. பேருந்தை சுப்பிரமணி என்ற ஓட்டுநர் இயக்கி உள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேகமாக வெளியே வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்தது.
பிரதமர் மோடியிடம் தமிழர்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைப்பேன் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு
கடையின் முன் பகுதியை உடைத்தபடி பேருந்து நின்ற நிலையில், கடையில் பணியாற்றிய பெண் இந்த விபத்தில் காயமடைந்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தின் அருகில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த சாலையில் பேருந்து சென்றிருக்கும் பட்சத்தில் இந்த விபத்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். மாறாக கடையில் புகுந்ததால் ஒரு பெண்ணுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.