VIDEO : பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து உணவகம்! நவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

By Dinesh TG  |  First Published Jun 10, 2023, 7:59 AM IST

பழனி அருகே பேருந்து நிறுத்ததை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றிய சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


பழனி அருகே பேருந்து நிறுத்ததை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றிய சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலை பழனியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வரதமா நதி அணை. இந்த அணைக்கு கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த அணையை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். மேலும் பழனியில் பேருந்து மூலம் அணையை பார்ப்பதற்காகவும் ,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அப்படி வருகை தரும் சுற்றுலா பயணிகள் அணைக்கு எதிரே பேருந்து நிறுத்துமிடம் உள்ளது.

அந்த பேருந்து நிலையத்தை மறைத்து தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள தள்ளுவண்டியை வைத்து பேருந்து நிறுத்ததை மறைத்து உணவகமாக மாற்றியும், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் இடத்தை சாப்பிடும் இடமாகவும், முன் பகுதியை மறைத்து கீற்று கொட்டகையாக கட்டபட்டு பேருந்து நிறுத்தமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இதுகுறித்து ஆக்கிரமிப்பு கடை உரிமையாளரிடம் கேட்ட போது நாங்கள் கடை வைக்கவில்லை என்றும், அருகில் கடை கட்ட உள்ளோம் அது வரை இங்கு வைத்துள்ளோம் என தெரிவிக்கின்றனர். மேலும் மழை வெயில் காலங்களில் பயணிகள் நிற்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் பேருந்து நிறுத்துமிடத்தை உள்ள ஆக்கிரமிப்பு உணவகத்தை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

click me!