திண்டுக்கல்லில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

By Velmurugan s  |  First Published Feb 20, 2023, 3:47 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை - வலையப்பட்டியில் குரும்பாரின மக்கள் சுமார் 300 ஆண்டுகளாக கோவில் திருவிழாவில்  தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் குரும்பாரின மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இக்கோவிலில் தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு பிரார்த்தனைகள் நடந்தவுடன் ஆண்டு தோறும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்செலுத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் 50க்கும் மேற்பட்டோருக்கு கோவில்  பூசாரி பூச்சப்பன் பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.  

இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கரூர், பொள்ளாச்சி, மதுரை, கோவை, உடுமலை, மற்றும் பல்வேறு மாநிலமான  கர்நாடகா , ஆந்திரா,கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ் விழாவில்  கலந்துகொண்டனர்.

click me!