பழனி முருகன் கோவிலில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மதியம் லைன்ஸ் கிளப் மதுரை மண்டல அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மாலை ரோப் கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாய்ரச்சை கால பூஜையில் கலந்து கொண்டு குடும்பத்தினருடன் அமர்ந்து தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டார்.
undefined
Dharshan at Lord Temple at ,Dindigul District .
Prayed for the well-being of all.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்தேன். pic.twitter.com/YSMjg81MYF
பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள போகர் சன்னதியில் போகர் சமாதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவில் வெளிப்பிரகாரத்தில் சூழ்ந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வத்துடன் குவிந்தனர். பின்னர் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுடன் பேசிய படியே ரோப் காரில் கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார்.