முருகனின் தீவிர பக்தை நான்; பழனிக்கு வானதி பாதயாத்திரை

By Velmurugan s  |  First Published Feb 3, 2023, 10:39 AM IST

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடந்த 30ஆம் தேதி கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையை துவக்கினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை துவங்கி வைத்து இருந்தார். 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி, உடுமலை வழியாக பாதயாத்திரையாக வந்த வானதி சீனிவாசன் இன்று பழனி வந்தடைந்தார். பழனி சண்முக நதியில் புனித தீர்த்தம் தெளித்துக் கொண்டார். பின்னர், தைப்பூசத் திருவிழா நடைபெறும் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.  தொடர்ந்து பழனி மலை கோவிலுக்கு சென்ற வானதி சீனிவாசன் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். 

Tap to resize

Latest Videos

undefined

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்

பாதயாத்திரை ஆக பழனி வந்த வானதி சீனிவாசனுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரியை நிறைவு செய்த வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.

click me!