திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(75). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி. இவர் வேடசந்தூர் பழனி சாலையில் அவருடைய மகன் நடத்தி வரும் எலக்ட்ரிக்கல் கடையில் பனி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(75). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி. இவர் வேடசந்தூர் பழனி சாலையில் அவருடைய மகன் நடத்தி வரும் எலக்ட்ரிக்கல் கடையில் பனி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அய்யர்மடம் அடுத்து சோலார் மில் அருகே சாலையை கடக்க முயன்ற போது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் மோதியது.
undefined
இதில், தூக்கி வீசப்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.