பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒருகோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்இழுவை ரயில் பெட்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான சந்திரமோகன் தனது சொந்த நிதியில் இருந்து நவீன மின்இழுவைரயில் பெட்டியை வழங்கியுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் வருகின்ற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் பல்வேறு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பணைக்கு கிடா வெட்டி நூற்றாண்டு விழா கொண்டாடிய கிராம மக்கள்
undefined
இந்நிலையில், ஒருகோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்இழுவை ரயில் பெட்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான சந்திரமோகன் தனது சொந்த நிதியில் இருந்து நவீன மின்இழுவைரயில் பெட்டியை வழங்கியுள்ளார். மலைக்கோவிலுக்கு மேலே செல்ல வசதியாக ஏற்கனவே மூன்று மின் இழுவை ரயில்கள் உள்ளன. இவற்றில் 30பேர் வரை பயணம் செய்யமுடியும். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள நவீனமான புதிய மின் இழுவை ரயில் பெட்டியில் 72 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் திருமணம் செய்ததற்காக 3 ஆண்டுகள் பேசாத பெற்றோர்; விரக்தில் பெண் தற்கொலை
தற்போது வழங்கப்பட்டுள்ள மின் இழுவை பெட்டி பக்தர்கள் சேவைக்கு வருவதற்கு சிறிது நாட்கள் ஆகும் என்றும் பெட்டியின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் எனவே தைப்பூசம் நிறைவடைந்து பிறகே புதிய மின்இழுவைரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.