நாளை முதல் திடையிடப்பட உள்ள பழனி மூலவர் சன்னதி… கோவிலில் குவிந்த பக்தர்கள்!!

By Narendran SFirst Published Jan 22, 2023, 5:18 PM IST
Highlights

பழனி முருகன் கோவிலில் மூலவரை நாளை மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

பழனி முருகன் கோவிலில் மூலவரை நாளை மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜன.27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மலைக் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் ஓதத் துவங்கியுள்ளனர். நாளை (ஜன.23) மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு ரத்து..? மத்திய அரசு கேட்ட விளக்கம்..! சட்டத்துறை மூலம் பதில் - மா சுப்பிரமணியன்

இதனால் நாளை மதியம் வரை மட்டுமே பக்தர்கள் மலைமீதுள்ள மூலவரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் பழனிக்கு ஏராளமான பக்தர்கள் இன்று வருகை தந்துள்ளனர். மேலும் 23 ஆம் தேதிக்கு பிறகு பழனிக்கு வரும் பக்தர்கள் மலை மீது சென்று யாகசாலையை வணங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க: திமுகவிற்கு இனி நாள் தோறும் அமாவாசை தான்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!!

மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காவடிகளை சுமந்து ஆடி பாடி கிரிவலம் வந்து முருகனை தரிசிக்க வருகின்றனர். மேலும் மலை மீது நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மூன்று முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மலையடிவாரம் மற்றும் மலை மீது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

click me!