திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் மருதாநதி அணைக்குச் சென்ற வாலிபரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது மருதாநதி அணை. இந்த அணையில் தற்போது விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள தாண்டிக்குடி அடுத்த மங்களம் கொம்பு பகுதியைச் சேர்ந்த கோபி(வயது 32), வினித்(23), ஆனந்த்(19), தினேஷ்(19) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மருதாநதி அணையில் குளிக்க சென்றுள்ளனர்.
அனைவரும் அணையில் குளித்து கொண்டிருந்த வேளையில் ஆழமான பகுதியில் சென்ற கோபி தண்ணிற்குள் மூழ்கி மாயமானார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த நண்பர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அணைக்குள் இறங்கி தேடினர்.
undefined
27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொட்டிய மழை.. 2k கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள் எப்படி.? வெதர்மேன் விளக்கம்
நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின்பு நீரில் மூழ்கிய கோபியின் உடலை மீட்டுக் கொண்டு வந்தனர். மேலும் பட்டிவீரன்பட்டி காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் கோபியின் உடலை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிராமணர்களுக்கு புதிய கட்சி... பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும்: எஸ்.வி. சேகர் அறிவிப்பு
மேலும் சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பருடன் குளிக்கச் சென்ற வாலிபர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.