திண்டுக்கல் பகுதிகளில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பலசரக்கடைகளில் துவரம்பருப்பு பதுக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் பகுதிகளில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பலசரக்கடைகளில் துவரம்பருப்பு பதுக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
undefined
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் துவரம் பருப்பு விலை கடும் உயர்வை சந்தித்துள்ளதாக பொதுமக்கள் உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பெயரில், காலை திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காட் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பலசரக்கடைகளில் துணை ஆட்சியர், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் துவரம் பருப்பு பதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதேபோல் உணவு பொருட்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மேலும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் பாக்கெட் போடப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்ள தேவைகள் எந்த மாதத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது
100க்கும் அதிகமான பராம்பரிய நெல் ரகங்களை மழலை மொழியில் ஒப்புவிக்கும் 4 வயது குழந்தை
ஆய்வின் போது, விதிமுறைகளை கடைபிடிக்காத மூன்று கடைகளுக்கு ரூபாய் 3000 வீதம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளிட்ட வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், துவரம் பருப்பு பொருட்கள் பதுக்க கூடாது என்றும் திடீராய்வு தொடரும் என்று கூறிச் சென்றனர்.