ஆண்களுக்கு மட்டும் விடிய விடிய கிடா கறி விருந்து! 100 அண்டாக்களில் அணையாமல் எரிந்த அடுப்பு!

By SG BalanFirst Published Mar 19, 2024, 6:42 PM IST
Highlights

அண்டா அண்டாவாக ஆக்கிய சோற்றில் கொதிக்கக் கொதிக்க மணக்கும் கிடாக்கறி குழம்பை ஊற்றி பிசைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். திண்டுக்கல் கிடா விருந்து விழாவில் எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமதிதல் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆண்களுக்கு மட்டும் விடிய விடிய கிடா கறி விருந்து விமரிசையாக நடந்ததுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா விருந்து திருவிழா நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவில் பிறந்த பெண் குழந்தையில் இருந்து வயதான மூதாட்டி வரை எந்த வயது பெண்களும் பங்கேற்க முடியாது.

இந்த விழாவில் ஆடுகள் நேர்த்திக் கடனாக அளிக்கப்படும். இந் தாண்டும் கிடா வெட்டி விருந்து வைக்கும் இந் தவிழா அமோகமாக நடந்தது. விழாவை முன்னிட்டு கோயிலில் கூடியிருந்த ஆண்டுகள் நள்ளிரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை ஆரம்பித்தனர்.

இப்பவே கண்ணைக் கட்டுதா? கோடையில் வெயிலில் இளைப்பாற பட்ஜெட் விலையில் சூப்பர் ஏசி!

வேட்டைக்காரன் கோயில் நேர்த்திக் கடனாக 50 ஆடுகள் பலியிடப்பட்டு, கிடா கறி குழம்பு வைக்கப்பட்டது. 100 மூட்டை அரிசியைக் கொட்டி மலை மலையாக சோறு ஆக்கப்பட்டது. இந்த கிடா கறி விருந்தில் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கு  மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.

விருந்தில் சுடச்சுட சோறும் ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது. திண்டுக்கல் மாட்டத்தில் பிரசித்த பெற்ற இந்த கிடா கறி விருந்தில் நத்தம், முளையூர், குட்டூர், வேலாயுதம்பட்டி, புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி என பல கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வந்திருந்தனர்.

அண்டா அண்டாவாக ஆக்கிய சோற்றில் கொதிக்கக் கொதிக்க மணக்கும் கிடாக்கறி குழம்பை ஊற்றி பிசைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். திண்டுக்கல் கிடா விருந்து விழாவில் எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

ஒரே தொகுதியில் 100 வயதைக் கடந்த 1049 வாக்காளர்கள்! சூப்பர் சீனியர் ஓட்டுகளை அள்ளப்போவது யார்?

click me!