திண்டுக்கல்: திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை.. பரபரப்பு சம்பவம்..

By Raghupati R  |  First Published Feb 26, 2024, 10:33 PM IST

திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை நாகராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.


திண்டுக்கல் மாநகராட்சியின் 25 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக சிவா என்பவரது தந்தை நாகராஜ் என்ற சரவணன், இவர் தனது வீடான பாறைப்பட்டி பகுதியில் இருந்து மக்கான் தெரு பள்ளிவாசல் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர். 

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் எழுந்து ஓட துவங்கிய போது ஓட ஓட பட்ட பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனால் திண்டுக்கல் மதுரை காந்திஜி புது ரோடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி பயந்து ஓட துவங்கினார்.

Tap to resize

Latest Videos

undefined

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

உடனடியாக தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடியா திமுக ஆட்சியில் பகலில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம கும்ப கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..

click me!