ஹெட் லைட்டை டிஸ்கோ லைட்டாக மாற்றி சாலையில் ஆட்டம் போட்ட ஆசாமிகளால்; பயணிகள் எரிச்சல்

By Velmurugan s  |  First Published Sep 12, 2023, 5:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் சிலர் சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டுவிற்கு நேற்று இரவு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து அரசு பேருந்து இரவு 9 மணி அளவில் வந்துள்ளது. வத்தலக்குண்டு அருகே  விராலிப்பட்டி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகே அரசு  பேருந்து வந்த  போது  மது போதையில் குறுக்கே வந்த தென்றல் நகர் காலணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து ஆட்டம் போட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதனை அடுத்து இவர்களை தட்டிக் கேட்ட பேருந்து ஓட்டுநரை போதை இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனைக் கண்ட சக பயணிகள் இளைஞர்களை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்ட  போது  தட்டி கேட்ட மூன்று பயணிகளை தாக்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி ஒருவர் பலி

இதில் காயம் அடைந்த மூன்று பயணிகளும் தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பேருந்தின் முன் சாலையில் வழிமறித்து போதையில் இளைஞர்கள் ஆட்டம் போடும் வீடியோ மற்றும் பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து வத்தலகுண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!