பழனியாண்டவர் கோவிலுக்கு சொந்தமான இருவேறு கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்

By Velmurugan s  |  First Published Mar 31, 2023, 1:01 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியாண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோவிலுக்குச் சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் பழனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனை ஒட்டியே அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக்கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. 

இங்குள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் இன்று 57ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலர் இன்று கல்லூரி அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தேநீர் அருந்திக்கெண்டிருந்த பழனியாண்டவர் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் பாஜகவில் தான் உள்ளனர் - கி.வீரமணி பேச்சு

இதையடுத்து இருதரப்பு மாணவர்களும் கல்வீச்சு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டு கடுமையாக மோதிக்கொண்டனர்.  இதில் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மோகன் மற்றும் கவின் ஆகிய இரு மாணவர்களுக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர காவல் துறையினர் மாணவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். 

தர்மபுரியில் சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்; குறிப்பிட்ட சமூகத்தினர் திரண்டதால் பரபரப்பு

காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் இரு கல்லூரிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!